House of Prayer / ஜெப வீடு

It is written, “My house shall be called a house of prayer, but you have made it a den of thieves"

Matthew 21:13

We all know this incident that is recorded in the bible. The day after the triumphal entry into Jerusalem, our Lord Jesus Christ steps into the temple and finds merchants and money exchangers trading and doing business. This angers the Lord and He turns their table down and rebukes them.
The prophecy mentioned in Isaiah 56:7 is fulfilled.
How does this verse applies to us.
1 Corinthians 6:19 says our body is the temple of the Holy Spirit.
The physical temple in Jerusalem ceased to exist after the resurrection of Lord Jesus Christ and after the pouring of the Holy Spirit upon the church.
Now we are the temple and we are expected to maintain the same status quo, that is to keep our temple filled with prayers.
It is important that we don't do what the Israelite's did in the temple, that is make the temple a place for business rather a place of worship.
As we are His temple, we should worship Him with sincere heart and not corrupt our life with the things of the world, which are lust, greed, pride, lies, unholy and so on.
We are consecrated through salvation and we are called to be House of Prayer, praying always and making intercession for all.
May you be that House of prayer that God's wants you to be.


என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.

மத்தேயு 21:13

இன்றைய வசனத்தில் எழுதி இருக்கிற இந்த நிகழ்ச்சி நாம் எல்லாருக்கும் அறிந்த ஒரு காரியம். வெற்றி பவனி சென்ற பிறகு மறுநாள் இயேசு எருசலேம் ஆலயத்திற்கு செல்கிறார், அப்பொழுது அங்கு வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறதை பார்த்து கோபம் கொண்டு அவர்களுடைய மேஜைகளை புரட்டி போடுகிறார். ஏசாயா 56:7லில் சொல்லி இருக்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.
ஆராதனைக்கு என்று பயன்படுத்தாமல் வியாபாரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்கள் பயன்படுத்தினார்கள். ஆதலால் தேவனின் கோபாக்கினைக்கு ஆளானார்கள்.
இந்த வசனம் நமக்கு எப்படி பொருந்தும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, ஆவியானவர் ஊற்றப்பட்டார், அதற்குப் பிறகு எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. ஒன்றுக்கொருந்திய 6:19 லில் நாமே தேவனின் ஆலயம் என்று கூறப்படுகிறது. ஆதலால் நாமும் நம் வாழ்க்கையை தேவனை ஆராதிக்கிற ஒரு வாழ்க்கையாய் வைத்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பப்படுகிறார். உலகத்தின் காரியங்களுக்கு இடம் கொடுக்காதபடி, பெருமைகோ, ச்சைகோ, பேராசைகோ, பரிசுத்தம் இல்லாத காரியத்திற்கோ இடம் கொடுக்காதபடி தேவனுக்கு மாத்திரம் இடம் கொடுக்க வேண்டும் என்பது கர்த்தரின் சித்தம்.
ஆதலால் உங்கள் சரீரமாகிய ஆலயத்தை ஜெப ஆலயமாக ஆராதனை ஆலயமாக தேவனை மகிமைப்படுத்துகிற ஆலயமாக எல்லோருக்காகவும் ஜெபிக்கிற ஆலயமாக பயன்படுத்துங்கள். உங்கள் சரீரம் ஜெப வீடாக மாறட்டும் கர்த்தருக்கு சாட்சியாய் இருக்கட்டும்.