Love that covers / மூடுகிற அன்பு

You shall love the LORD your God with all your heart, with all your soul, and with all your mind. You shall love your neighbor as yourself. On these two hangs all the Law and the Prophets.

Matthew 22:37-40

God gave 613 commandments to the people of Israel and said to them if you keep all these commandments you will be blessed going out and coming in, your barns shall be fully and plenty, you will eat and be satisfied, no evil will come over you and many other blessings.
But humanly it was impossible to keep all these commandments. People of Israel failed miserably and became a subject of curse and need a Savior very badly.
So are we. We have miserably failed in walking in God's righteous ways and hence became subject to curse and needed a Savior.
Thank God, our Lord Jesus Christ came to our rescue and has redeemed us from the curse of the law.
Now we are given only two commandments to follow, loving our LORD and Savior Jesus Christ with all of our heart and loving our neighbor as ourselves.
When we do these two, it covers all that the law and prophets demand. 1 Peter 4:8 says love covers multitude of sin.
Hence walk in this love by taming your flesh and getting the help from the Holy Spirit. So you can walk blessed and so the blessings of Abraham will be upon you.

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

மத்தேயு 22:37-40

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 613 கட்டளைகளை தந்து, இவைகளை கைக்கொண்டால் போக்கையும் வரத்தையும் நான் ஆசீர்வதிப்பேன் என்ற ஆசீர்வாதமும், களஞ்சியங்கள் நிரம்பி வழியும் என்ற ஆசீர்வாதமும், நீ சாப்பிட்டு திருப்தியாய் இருப்பாய் என்ற ஆசீர்வாதமும், தீமை ஏதும் அணுகாது என்ற ஆசீர்வாதமும் கொடுக்கப்படும் என்றார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ இந்த கட்டளைகளை கைக்கொள்ளதவறினார், அதனால் சாபத்திற்கும் ஆளாகினர்.
அவர்களை மீட்க ஒரு ரட்சகர் தேவைப்பட்டது.
நாமும் இந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போல கர்த்தரின் வழிகளை பின்பற்ற தவறி இருக்கிறோம், அதனால் கர்த்தரின் கோபத்திற்கு இடம் கொடுத்திருக்கிறோம், நமக்கும் ஒரு ரட்சகர் தேவைப்பட்டது.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவே அந்த ரட்சகராக வந்து நம்மை சாபத்திலிருந்து மீட்டார். சாபத்திலிருந்து மீட்டது மாத்திரமல்ல இனிமேல் இரண்டு கட்டளைகளை மாத்திரம் நாம் கை கொண்டால் போதும் அது 613 கட்டளைகளை கை கொள்வதற்கு சமம் என்று சொல்லி இந்த இரண்டு கட்டளைகளை இயேசு நமக்கு கொடுத்தார்.
அந்த இரண்டு கட்டளை தான் இது. கர்த்தரை உன் முழுமனதாய் நேசி, பிறரை முழுமனதாய் நேசி என்பதே. இந்த இரண்டு கட்டளைகளை நாம் கைக்கொள்ளும் பொழுது நம் பாவங்கள் எல்லாம் மூடப்படுகிறது. கர்த்தரின் பார்வையில் நாம் குற்றமற்றவர்களாய் காணப்படுகிறோம்.
1 பேதுரு 4:8 இல் கூறப்பட்டிருக்கிற படி, அன்பு எல்லா பாவங்களையும் மூடும்.
ஆதலால், நாம் கர்த்தரை முழுமனதாய் நேசிப்போம், பிறரையும் அவ்வாறாக நேசிப்போம், கர்த்தருடைய பார்வையில் குற்றமற்றவர்களாய் காணப்படுவோம், அவருடைய மகத்தான ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்ந்திருப்போம் ஆமென்.