Working Father / செயலாற்றுகிற பிதாவானவர்

My Father has been working until now, and I have been working.

John 5:17

We many times have an image of God as someone who is mighty and strict and one who instructs us to do good things and worship Him.
This is all true, but there is the other side God whom we have the privelege to call Him Father.
Like any earthly Father who cares for the well being of his child, heavenly Father too cares for all of us, much more than we can think or imagine.
Earthly father may have limitations but heavenly Father does not.
He watches over you and me always and He works in our life to fulfill His plan.
His plan for your life is to make you prosper and enjoy abundant life. That is what He promised in Jeremiah 29:11
Hence He always works to achieve that goal in our life.
Our heavenly Father works through other, through situation and circumstances and through the Holy Spirit who is in us.
So be encourage today, if life is not taking you in the direction you planned or desired.
God's finger print is all over you and around you and all things concerning you works for good because you belong to the heavenly Father.
Trust Him and He will surely achieve the goal He has for you and prosper you and honor you.

இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.

யோவான் 5:17

நாம் ஆராதிக்கிற தேவன் பெரியவரும், பரிசுத்தரும், கண்டிப்பானவரும் நாம் நல்லதை செய்ய வேண்டும் என்பதை விரும்புகிறவர் என்றும் அவரைக் குறித்து நினைப்பதுண்டு.
ஆனால் இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனை பற்றி இவ்வாறாக கூறியுள்ளார். பிதாவாகிய தேவன் நம் சார்பில் செயலாற்றுகிறவராய் இருக்கிறார்.
அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாய் இருப்பினும் உங்களையும் என்னையும் கருத்தாய் கவனித்து நமக்கு நன்மை உண்டாயிருக்கும் படி ஒவ்வொரு சமயமும் நம் சார்பில் செயலாற்றுகிறார்.
சூழ்நிலைகள் மூலமாகவும், சந்தர்ப்பங்கள் மூலமாகவும், மற்றவர்கள் மூலமாகவும், நமக்குள் ஜீவிக்கிற ஆவியானவரைக் கொண்டு நம் பிதாவாகிய தேவன் செயலாற்றுகிறார். பூமியில் இருக்கிற ஒரு தகப்பனை போல நம் பரலோக தகப்பன் நமக்காக செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பூலோக தகப்பனுக்கு கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் நம் பரலோக தகப்பனுக்கோ எந்த ஒரு கட்டுப்பாடும் அவரை நமக்கு நன்மை செய்வதற்கு தடுத்து நிறுத்துவதில்லை.
ஆதலால் திடன் கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வேதம் சொல்லுகிறது சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறது என்று.
பிதாவாகிய தேவன் உங்களுக்கும் எனக்கும் செழிப்பான வாழ்க்கையை வைத்திருக்கிறார் அதை நிறைவேற்றுவது அவருடைய இலக்கு. நினைத்ததை நிச்சயம் அவர் செய்து முடிப்பார். அவர் நினைத்தது ஒரு நாளும் தடைப்படாது ஏனென்றால் அவர் செயலாற்றுகிற பிதாவானவர் .