You will live / நீங்கள் பிழைப்பீர்கள்

Because I live, you will live also.

John 14:19

What is life? This word is defined as existence. Life is once existence. Life shows what one does, how he or she is? what is their nature, what is their condition and so on.
We strife to live a better life which is filled with goodness, good health, good finances, good position, good relationship, happiness, success and victory.
We sometimes are able to achieve some of them, but most of the time struggle to live healthy, live with abundance, live with happiness.
Most of the time our life is filled with pain, sorrow, disappointment, frustration, dissatisfaction.
We think life is like that and it is fate and we have to undergo such bad experiences.
But our Lord Jesus Christ tells us that we can live life to the fullest, with goodness, health, happiness, victory, because He lives.
Our Lord Jesus Christ is our live giver. He is life and no other.
Word of God says in 1 John 1:5 that in Him there is no darkness, there is no sorrow, or pain or disappointment, defeat, dissatisfaction, brokenness.
In the world yes you will have all sorts of trouble, but in Christ you will live and overcome all the troubles.
In Christ there is joy and satisfaction all the days of our life.
So seek Him with all your heart and you will remain in Him and your joy will be full and you will live a blessed life.
Look at Him always and not the world and draw from Him joy, peace and all life's goodness and riches.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.

யோவான் 14:19

வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கை என்றால் ஒருவர் வாழும் காலத்தை குறிக்கிறது. அந்தக் காலத்தில் அவர் என்ன செய்கிறார் அவர் எப்படிப்பட்டவர் அவருடைய வழிகள் என்ன அவர் எதை சாதித்தார் என்ற காரியத்தை தெரியப்படுத்துவது வாழ்க்கை.
நாம் எல்லோரும் நல்ல வாழ்க்கைக்காக, சந்தோஷமான வாழ்க்கைக்காக, சுகம் நிறைந்த வாழ்க்கைக்காக, வெற்றி உள்ள வாழ்க்கைக்காக சமாதானமான வாழ்க்கைக்காக பிரயாசப்படுவது உண்டு.
ஆனால் பல தடவை நாம் துன்பத்தையும் துயரத்தையும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் அனுபவிப்பது உண்டு. அதனால் நம் வாழ்க்கை இப்படியாகத்தான் இருக்கும் என்று முடிவு எடுப்பது உண்டு.
ஆனால் இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து வேறு விதமாய் கூறுகிறார். அவர் தாம் வாழ்ந்து இருப்பதினால் நாமும் சுகமாய் சந்தோஷமாய் வெற்றியுடன் வாழ முடியும் என்று நமக்கு சொல்லி இருக்கிறார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் தாமே அப்படிப்பட்ட வாழ்க்கையை தர தகுதி உள்ளவராய் இருக்கிறார். இயேசுவின் இடத்தில் எந்த ஒரு தோல்வியும் இல்லை துயரமும் இல்லை துன்பமும் இல்லை என்று ஒன்று யோவான் ஒன்றாவது அதிகாரம் ஐந்தாவது வசனத்தில் எழுதி இருக்கிறதை நாம் கவனிப்போம். இந்த உலகத்தில் தோல்விகளும் துன்பங்களும் துயரங்களும் உண்டு . ஆனால் இயேசு கிறிஸ்துவிடத்தில் இவைகள் இல்லை ஆதலால் நாம் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் இருப்போம் அவரைத் தேடுவோம் அவரை நாடுவோம் அப்பொழுது இப்படியான உலகத்தின் துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் மறையும்.
இயேசு ஜீவிக்கிறதுநாள் நாமும் சந்தோஷமாக சமாதானமாக வெற்றியுடன் சுகமாய் இருக்க கூடும். இயேசுவோடு கூட இருங்க எப்பொழுதும் அதுவே உங்களுக்கு நல்ல வாழ்வை அளிக்கும்.