Grace that saves/இரட்சிக்கிற கிருபை

We believe that through the grace of the Lord Jesus Christ we shall be saved.

Acts 15:11

Grace, this word has been used very often in churches, in sermons, within Christian homes and is a very common word.
But little we realize the power of this word in the bible.
Grace by itself has nothing, but the Grace when it is of the Lord Jesus Christ, it is powerful.
In today's verse we read that grace of Lord Jesus Christ shall save.
Nothing in this world, no sin in this world has power over grace. Romans 5:20 says, where sin increases grace of Lord Jesus Christ increases much more.
So what this all means to us.
It means this, when we approach our Lord Jesus Christ, it is His grace that saves us, heals us, delivers us, helps us, upholds us.
Not everyone who approaches gets this grace, it is those who approach Him with a sincere, repentant heart, humble heart not being self righteous but acknowledging the sinful nature and depending on God's righteousness.
This kind of approach releases the powerful grace of Lord Jesus Christ in our lives, which performs miracle and wonders.
So today allow God's abundant grace flow over your life. Submit to His grace, don't feel guilty but instead be genuine in your condition, because God knows your heart.
May the power of grace of Lord Jesus Christ save you from all your situations.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

அப்போஸ்தலர் 15:11

கிருபை, இந்த வார்த்தையை நாம் பல தடவை கேட்டிருக்கிறோம். சபையில் போதகர் உடைய செய்திகளிலும், வீட்டிலும், இன்னும் பல இடங்களில் இந்த வார்த்தை சொல்லி இருக்க கேட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த வார்த்தையின் வல்லமையை நாம் பல தடவை அறியாமல் இருக்கிறோம். இன்றைய வசனம் கிருபையினுடைய வல்லமையை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. கிருபை என்ற வார்த்தை சாதாரணமானது, ஆனால் இயேசு கிறிஸ்துவின் கிருபையோ வல்லமை வாய்ந்தது.
ரோமர் 5:20தில் கூறிஇருக்கிற படி, பாவம் எங்கு பெருகுகிறதோ தேவனுடைய கிருபை அதற்கும் மேலாய் பெருகுகிறது.
இது நிமித்தம் நாம் அறிந்து கொள்வது என்ன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையான இருதயத்தோடு நாம் பாவி என்று அறிந்து அவரிடத்தில் நாம் போகும் பொழுது அவருடைய கிருபையின் வல்லமை நம்மை காப்பாற்றுகிறது நம்மை விடுதலையாகுகிறது.
கர்த்தரை அணுகுகிற யாவருக்கும் இந்த கிருபை அளிக்கப்படுவதில்லை.
தான் பாவி என்றும் கர்த்தர் ஒருவரே பரிசுத்தர் என்றும் உணர்ந்து அவரிடத்தில் செல்லுகிறவர்களுக்கு இரட்சிப்பை தருகிற, சுகத்தை தருகிற, விடுதலையை தருகிற, அற்புதத்தை செய்கிற இந்த கிருபை அளிக்கப்படுகிறது.
ஆதலால் தேவனிடத்தில் தாழ்மையாய் பாவி என்று உணர்ந்து அவரிடத்தில் செல்லுவோம் அவரிடத்தில் இருந்து கிருபையின் வல்லமையை நாம் பெற்றுக் கொள்வோம் ஆமென்.