When prayer is heard? / எப்பொழுது ஜெபம் கேட்கப்படுகிறது?

Now we know that God does not hear sinners; but if anyone is a worshiper of God and does His will, He hears him.

John 9:31

We all pray much. We fast and pray, we pray during the lent days, we pray individually, along with others and at the church, believing that God hears the prayers.
The verse today tells us whose prayers are heard.
God hears the prayers of those who worship Him with a sincere heart and who does His will.
These are the two important condition mentioned in the verse today for God to hear our prayers.
Yes, it is important to pray at all times, but it is even more important to make sure the prayer you pray are heard by God the Father.
God who sees you and me, sees our heart and from it He knows our sincerity and eagerness and also if we are in a state to do His will.
Whatever God instructed us to do in His Word (The Bible), like loving Him, loving others even our enemy, forgiving others, sharing the Gospel, acknowledging Him are some of the general will of God.
We all want to be sure that our prayers are heard by God.
Therefore, let's make sure we worship Him truly and do His will, which will give us confidence that our prayers are heard by God.
He is not only prayer hearing God but prayer answering God. When He hears He answers.

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

யோவான் 9:31

நாம் அனைவரும் அதிகம் ஜெபிக்கிறவர்களாய் இருக்கிறோம். உபவாசித்து ஜெபிக்கிறோம், லெந்து காலங்களில் ஜெபிக்கிறோம், தனித்தனியாக, மற்றவர்களுடன் மற்றும் தேவாலயத்தில் ஜெபிக்கிறோம், கடவுள் ஜெபங்களைக் கேட்கிறார் என்றும் நம்புகிறோம்.
ஆனால் இன்றைய வசனம் யாருடைய ஜபம் கேட்கப்படுகிறது என்று நமக்கு விளக்கி கூறுகிறது.
உண்மையுள்ள இதயத்தோடு தம்மை ஆராதிப்பவர்களுடைய ஜெபமும், கர்த்தருடைய சித்தத்தை செய்கிறவர்களுடைய ஜெபமும் கேட்கப்படுகிறது என்று இந்த வசனத்தின் மூலமாக நாம் அறிகிறோம்.
நம்மளுடைய ஜெபம் கேட்கப்படுவதற்கு இந்த இரண்டு காரியங்கள் முக்கியமானவைகள்.
ஆம், எல்லா நேரங்களிலும் ஜெபிப்பது முக்கியம், ஆனால் நீங்கள் ஜெபிக்கும் ஜெபத்தை பிதாவாகிய தேவன் கேட்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது இன்னும் முக்கியமானது.
நாம் ஜெபிக்கும் பொழுது கர்த்தர் நம் இதயத்தைப் பார்க்கிறார், அதிலிருந்து அவர் நம் நேர்மையையும், ஆர்வத்தையும் அறிகிறார், மேலும் அவருடைய சித்தத்தைச் செய்யும் நிலையில் நாம் இருக்கிறோமா என்றும் அறிந்து கொள்ளுகிறார்.
கர்த்தர் தம்முடைய வார்த்தையில் (பைபிளில்) அவருடைய பொதுவான சித்தம் என்ன என்பதை சொல்லி இருக்கிறார். அவரை நேசிப்பது, நம் எதிரியையும் நேசிப்பது, மற்றவர்களை மன்னிப்பது, நற்செய்தியைப் பகிர்வது, அவரை ஒப்புக்கொள்வது போன்றவை கர்த்தருடைய பொதுவான விருப்பங்களில் சில.
நாம் அனைவரும் நம்முடைய ஜெபங்களை கர்த்தர் கேட்கிறார் என்பதில் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.
எனவே, நாம் அவரை உண்மையாக வணங்குவதையும் அவருடைய சித்தத்தைச் செய்வதையும் உறுதி செய்வோம், இது நம்முடைய ஜெபங்களை கர்த்தர் கேட்கிறார் என்ற நம்பிக்கையை நமக்குத் தரும்.
கர்த்தர் ஜெபத்தை கேட்கிறவர் மாத்திரமல்ல கேட்டு பதில் தருகிறவருமாய் இருக்கிறார்.
எனவே அவரை நேசிப்போம் அவருடைய சித்தத்தை செய்வோம் அதுவே நம் ஜெபங்கள் கேட்கப்படுவதற்கு ஏற்ற வழி