Lord's Sheep / கர்த்தரின் ஆடு

My sheep hear My voice, and I know them, and they follow Me.

John 10:27

Sheep and Shepherd have a unique relationship. A sheep only follows the shepherd when it has spent quality time with the shepherd.
By spending more time with the shepherd, the sheep comes to know about the shepherd and his nature and starts to trust him blindly.
The sheep knows for sure that it's shepherd will not do any harm to it and always does good.
Hence the sheep obeys and does all that shepherd asks it to do and follows the shepherd were ever he goes, because it knows very well it's shepherd.
Jesus used the sheep's quality as an example to tell us that we also must be like the sheep.
Like how the sheep spends time with the earthly shepherd, we also are called to spend quality time with our heavenly Shepherd our LORD Jesus Christ.
When we do, we come to know about who our LORD is, HIS nature, HIS power, HIS Love, which will make us trust in Him with all our heart,
and follow Him blindly wherever He takes us.
Our LORD Jesus Christ always takes us to green pastures and makes us lie beside still waters.
Many time we don't trust Him and miss the blessings He has for us. We don't trust Him, because we don't know Him.
Let's be His sheep, Let's be LORD's sheep and trust and follow Him blindly, so He can take us to green pastures and make us sit beside still waters.

மெய்ப்பனக்கும் ஆடுக்கும் இடையே உள்ள உறவு விசேஷித்த தனிப்பட்ட ஒரு உறவு. ஒரு ஆடானது மெய்ப்பனிடம் அதிக நேரத்தை  செலவழிக்கும் பொழுது தான் அந்த மெய்ப்பனை பின் தொடர ஆரம்பிக்கிறது.  
மெய்ப்பனிடம் நேரத்தை செலவழிக்கும் பொழுது  அந்த ஆடு மேய்ப்பனை குறித்த  காரியங்களை  அறிந்து கொள்ளுகிறது.  
அவர் எப்படிப்பட்டவர் அவருடைய குணாதிசயம் என்ன  என்பதை  அறிந்து கொள்ளுகிறது.  
அப்படியாக அறிந்து கொள்ளும் பொழுது  அந்த ஆட்டிற்கு அந்த மெய்ப்பனின் மீது  ஒரு விசேஷித்த நம்பிக்கை உண்டாகிறது.   அதனால் முழுமையாக அந்த ஆடு அந்த மேய்ப்பனை  நம்ப ஆரம்பிக்கிறது.  
அந்த மெய்ப்பன் எதை சொன்னாலும் அந்த ஆடு செய்ய ஆரம்பிக்கிறது. இந்த மெய்ப்பன் எங்கு சென்றாலும் அந்த ஆடு பின் தொடர ஆரம்பிக்கிறது.  
இயேசு இந்த உதாரணத்தின்  மூலியமாய்  நம்பளையும்  அந்த ஆட்டை போல இருக்கும்படியாக அழைக்கிறார்.  
நாமும் இயேசுவோடு அதிக நேரத்தை செலவழிக்கும் பொழுது அவர் யார், அவருடைய குணாதிசயம் என்ன, அவர் எப்பேர்ப்பட்டவர்  என்பதை அறிய முடிகிறது.  
அதனால் இயேசுவின் மீது முழு நம்பிக்கையை நம்மளால் வைக்க முடிகிறது. அவர் என்ன சொன்னாலும்  நாம் செய்ய முடிகிறது , அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின் தொடர முடிகிறது.  
இயேசு உங்களை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போய் விட விருப்பப்படுகிறார். ஆதலால் அவருடைய ஆடுகளாய் இருங்கள்.
அவரிடம் நேரத்தை செலவளியுங்கள். அப்பொழுது அவர் உங்களை ஆசீர்வதிக்கக்கூடும். ஆசீர்வாதமான இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்ல கூடும்.
கர்த்தருடைய ஆடுகளாய் இருங்கள். ஆமென்.