Let God trust you /கர்த்தர் உங்கள் மேல் நம்பிக்கை வைக்க விடுங்கள்

He who is faithful in what is least is faithful also in much.

Luke 16:10

God always looks at us to see how we handle things which are given to us. Yes, nothing we have is not without God giving it to us.
Be it wife or husband or children or job or house or car or riches.
James 1:17 says every good gift comes from Him who is the Father of lights.
When God gives the good gifts He see how we handle it, are we satisfied with the gift, are we faithful with it and content with it.
or
are we grumbling, complaining, fighting, lethargic and not truthful
Our actions to God's gift determines receive bigger gifts from Him.
Today's verse mentions the same. When we are truthful with whatever little in our job or business or in our finances or with our children and spouse,
then it pleases our Father in heaven.
He can trust to give you bigger things, promotion in job or financial blessing and much more, because He knows you will be faithful to Him in bigger things.
When you teach your children good Godly ways, then God will bless them abundantly, because He knows that the children are taught His ways and will not be spoiled by the blessing.
Allowing God to trust you in little things is key to bigger blessing. Remember He is always watching you in what is given in you hands.

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.

லூக்கா 16:10

 நம் கைகளில் கொடுக்கப்பட்டவைகளை எப்படி கையாளுகிறோம் என்று கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம்மிடம் இருக்கிற எல்லா நல்ல ஆசீர்வாதங்களும் தேவனிடத்தில் இருந்து வந்தவைகள். அது மனைவியானாலும் சரி, பிள்ளைகள் ஆனாலும் சரி, வீடு ஆனாலும் சரி,  எந்த நற்கிரியையும் தேவனிடத்தில் இருந்து வந்தது. இதை நாம் யாக்கோபு 1:17 வசனத்தில் வாசிக்கிறோம்.
  கர்த்தர் நமக்கு நல்ல ஈவுகளை கொடுக்கும் பொழுது அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்று அவர் அதில் நோக்கமாய் இருக்கிறார். நாம் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்களை முறுமுறுக்கிறோமா, அல்லது  அதிருப்தியாய் இருக்கிறோமா, அல்லது குறை சொல்லுகிறோமா, என்று கர்த்தர்  கவனிக்கிறார்.
  கர்த்தர் கொடுத்த சிறிய ஈவுகளில் நாம் உண்மையாய், திருப்தியாய், சந்தோஷமாய், இருக்கும் பொழுதும், அந்த சிறிய ஈவுகளை கவனமாய்  கைக்கொள்ளும் பொழுதும், கர்த்தர் நம் மீது நம்பிக்கை வைக்க செய்கிறோம். கர்த்தர் நம் மீது நம்பிக்கை வைக்கும் பொழுது பெரிய காரியங்களையும், ஈவுகளையும், ஆசீர்வாதங்களையும், கொடுக்க அவர் விரும்புகிறார்.  நம் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வழியை நாம் சொல்லிக் கொடுக்கும் பொழுது, கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் ஏனென்றால் பிள்ளைகள் ஆசீர்வாதத்தின் மூலமாக கெட்டுப் போவதில்லை என்பது அவருக்கு தெரியும். ஆதலால் பிரியமானவர்களே  கர்த்தர் கொடுக்கிற சிறிய காரியத்தில் உண்மையாய் இருங்கள்  அது கர்த்தரிடத்தில் இருந்து பெரிய ஆசீர்வாதங்களை பெறுவதற்கு திறவுகோலாய் இருக்கும்.