Imitators / பின்பற்றுகிறவர்கள்

Therefore be imitators of God as dear children.

Ephesians 5:1

Lord Jesus Christ the Son of God came to earth and was born as Son of man so that you and me can become sons and daughters of God.
Yes, when we believe in Lord Jesus Christ as one true God and only way to the Father God in heaven, we are adopted as God's children.
When we are adopted into God's family, we are then expected to become imitators of God. Imitators of Lord Jesus Christ.
When our Lord Jesus was on earth, He showed and shared love to all around Him. Treated all around Him with respect, did not complaint about others, was not thinking wrong about others, He loved other even inspite of their imperfection.
Since we have become God's children we also should walk like Jesus. Loving others and helping others, caring for those who are in need and imitate what Christ did.
When we imitate Christ and show love to others it proves that Christ lives in us and that we are truly saved.
Matthew 6:33 says to seek His righteousness, that is His way of living, which is through love.
Be Imitators of Christ and when you do so you give no room for the accuser the devil.
Walk like God's children, because you are one.

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி.

எபேசியர் 5:1

தேவகுமாரனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து, நீங்களும் நானும் தேவனுடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் ஆக மனித குமாரனாகப் பிறந்தார்.
ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்றும் பிதாவின்னிடத்தில் வருவதற்கு அவரே வழி என்றும் நம்பும் பொழுது, நாம் கடவுளின் குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.
நாம் கடவுளின் குடும்பத்தில் சேர்க்கப்பட்டதினால், அவரை பின்பற்றுபவர்களாக மாற வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, அவர் தம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அன்பைக் காட்டினார் . தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் மரியாதையுடன் நடத்தினார், மற்றவர்களைப் பற்றி குறை சொல்லவில்லை, மற்றவர்களைப் பற்றி தவறாக நினைக்கவில்லை, மற்றவர்களின் குறைபாடு இருந்தபோதிலும், அவர் அவர்களை நேசித்தார்.
நாம் கர்த்தரின் பிள்ளைகளாகினதால், நாமும் இயேசுவைப் போல் நடக்க வேண்டும். பிறரை நேசித்து மற்றும் பிறருக்கு உதவி செய்து, தேவைப்படுபவர்களைக் கவனித்து, கிறிஸ்து செய்ததைப் போல் வாழ வேண்டும்.
நாம் கிறிஸ்துவைப் பின்பற்றி, பிறரிடம் அன்பு காட்டும்போது, கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்பதையும், நாம் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நிரூபிக்கிறது.
மத்தேயு 6:33 அவருடைய நீதியைத் தேடுங்கள் என்று கூறுகிறது. அன்பு செலுத்துவதே கர்த்தரின் நீதியைத் தேடுவதற்கு சமமாகும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருங்கள், அவ்வாறு செய்யும்போது, உங்களை பிசாசு குற்றம் சாட்ட இயலாது.
கர்த்தரின் பிள்ளைகளாக இருப்போம், கர்த்தரின் பிள்ளைகள் என்று உணர்ந்து நடப்போம்