No failure / தோல்வி இல்லை

Be cheerful your faith has made you well.

Matthew 9:22

We read in this passage of scripture about a women with a rare sickness. Flow of blood for twelve long years.
She seems to be from a wealthy family, because bible says that she tried many expensive treatments but all failed.
So finally she comes to Jesus believing and hoping to be healed.
Her hope and faith in Lord Jesus Christ didn't fail her. She was healed instantly the moment she touched Jesus garments.
You may be today suffering from sickness or other problems and challenges for a long time like this women.
But like her, never give up your hope on Jesus. All else will fail, but Jesus never fails you.
Today you may be also believing and hoping like this women for a miracle.
Your hope will not lead to disappointment.
Because Jesus is faithful. He uses the faith you have in Him to perform that miracle.
Expect your miracle any moment, Jesus never fails.

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

மத்தேயு 9:22

இந்த வேதப் பகுதியில் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி படிக்கிறோம். பன்னிரண்டு வருடங்களாக ரத்த நோயால் அவதிப்பட்டாள்.
அவள் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது, ஏனென்றால் அவள் பல விலையுயர்ந்த சிகிச்சைகளை முயற்சித்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் அனைத்தும் தோல்வியடைந்ததாக பைபிள் கூறுகிறது.
எனவே இறுதியாக அவள் ஒரு அற்புதத்திற்காக இயேசுவையே நம்பி வந்தாள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான அவளுடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை. இயேசுவின் ஆடைகளைத் தொட்ட உடனேயே அவள் குணமடைந்தாள்.
நீங்கள் இன்று இந்த பெண்ணை போல நீண்ட காலமாக நோய் அல்லது பிற பிரச்சனைகள் மற்றும் சவால்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்தப் பெண்ணை போல, இயேசுவின் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள். மற்ற அனைத்தும் தோல்வியடையும், ஆனால் இயேசு ஒருபோதும் உங்களைத் தவறவிடமாட்டார்.
இன்று நீங்கள் ஒரு அதிசயத்திற்காக இந்த பெண் எதிர்பார்த்தது போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம்.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
ஏனென்றால் இயேசு உண்மையுள்ளவர். நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கொண்டு அவர் அந்த அற்புதத்தை செய்வார்.
நீங்கள் எதிர்பார்த்து இருக்கிற அற்புதம் எந்த நேரத்திலும் நடக்கக்கூடும். இயேசு உங்களை கைவிடார்.