By His Spirit / ஆவியினாலேயே ஆகும்

Not by might not by power, but by My Spirit, Says the LORD of hosts.

Zechariah 4:6

After the exile in Babylon, some Israelite's return to Jerusalem under leadership of Zerubbabel. They took the task of rebuilding the destroyed temple of God. While doing so, they faced strong opposition from the local people and various challenges. It became a most difficult task.
That is when word of the Lord came through prophet Zechariah encouraging Zerubbabel and Isralites that it is not by their might or power they will accomplish this task, but by the Spirit of God.
Yes, sometimes you too face strong opposition in your life and find it difficult to accomplish the task given in your hand. If the task you are doing were not of God's will or if the task is worldly their wouldn't have been any opposition. But since you are building God's temple, since you are doing a task which is as per God's will, since you are in center of God's will there is a strong opposition.
Be encouraged. God will help you accomplish your task, He will help you complete what you started, He will help you finish strong. He does that through His Spirit.
Today pray to Lord Jesus and ask Him to help you through His Spirit.
Do not face your opposition by your own might and power, instead submit to the Spirit of living God and He will give you great victories.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 4:6

பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட பிறகு, சில இஸ்ரவேலர்கள் செருபாபேலின் தலைமையில் எருசலேமுக்குத் திரும்பினர். அழிக்கப்பட்ட கர்த்தரின் ஆலயத்தை மீண்டும் கட்டும் பணியை மேற்கொண்டனர். அவ்வாறு செய்யும்போது, அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டனர். இது மிகவும் கடினமான பணியாக மாறியது.
அப்போதுதான் சகரியா தீர்க்கதரிசி மூலம் ஜெருபாபேல் மற்றும் இஸ்ரவேலர்களை ஊக்குவிப்பதன் மூலம் கர்த்தருடைய வார்த்தை வந்தது, அவர்கள் தங்கள் வல்லமை அல்லது பெலத்தினால் இந்த பணியை நிறைவேற்ற மாட்டார்கள், மாறாக கர்த்தரின் ஆவியால் மேற்கொண்டு ஜெயம் எடுப்பார்கள் என்று.
ஆம், சில சமயங்களில் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள கூடும், உங்கள் கையில் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவது கடினமாக இருக்கக்கூடும். நீங்கள் செய்யும் பணி கர்த்தரின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இல்லாவிட்டால் அல்லது உலகப் பணியாக இருந்தால் எந்த எதிர்ப்பும் இருந்திருக்காது. ஆனால் நீங்கள் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டுவதால், கர்த்தரின் விருப்பப்படி ஒரு பணியைச் செய்வதால், கர்த்தரின் விருப்பத்தின் மையத்தில் நீங்கள் இருப்பதால் கடுமையான எதிர்ப்பு உள்ளது.
திடன் கொள்ளுங்கள். உங்கள் பணியை நிறைவேற்ற இயேசு உங்களுக்கு உதவுவார், நீங்கள் தொடங்கியதை முடிக்க அவர் உங்களுக்கு உதவுவார், வலுவாக முடிக்க உதவுவார். அவர் தனது ஆவியின் மூலம் அதைச் செய்கிறார்.
இன்று கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபித்து, அவருடைய ஆவியின் மூலம் உங்களுக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேளுங்கள்.
நீங்கள் உங்கள் பலத்தினாலோ வல்லமையினாலோ எதிர்ப்புகளை சந்திக்காத படி கர்த்தரின் ஆவியானவரிடம் ஒப்படையுங்கள், அப்பொழுது பெரிய வெற்றியை காண்பீர்கள்.