Eaten years / தின்று அளித்த வருடங்கள்

I will restore to you years that the swarming locust has eaten.

Joel 2:25

Joel chapter 2 describes the Day of the LORD, a time of darkness and destruction. It portrays a powerful and unstoppable army that brings devastation. The passage calls for repentance, urging people to turn to the LORD with fasting and mourning. It promises blessings and restoration for those who return to God.
God promises restoring from all the years that was eaten, all the blessings of God that was lost or stolen.
Yes like Israel, we too due to our lack and negligence towards God, lose His blessings and allow it to be stolen by the locusts.
But our God is merciful. When we repent from our current and past condition, Lord forgives us and restores us.
That is He returns all that we lost, He returns to us all that is stolen from us.
Be it health, finances, relationship, peace, The Lord restores everything for us.
Are you in the middle of locusts, have they eaten your years? Don't worry.
Set a period of time in prayer and fasting, seek the Lord with all your heart, seek His mercy and forgiveness, change the way you live, commit to God,
When you do so, this promise of God will be fulfilled in your life. Lord will restore you all that you have lost.

வெட்டுக்கிளிகள் தின்று அழித்த வருடங்களை, உங்களுக்கு ஈடுசெய்வேன்.

யோயேல் 2:25

யோவேல் இரண்டாவது அதிகாரம் கர்த்தருடைய நாள் என்ற ஒன்றைக் குறிக்கிறது. இந்த நாள் இருளும் அழிவும் நிறைந்த நாளாக இருக்கக் கூடும் என்று கூறுகிறது.
ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டு விலகினபடியினால்.
ஆனால் கர்த்தர் அவர்களை விட்டு விலகவில்லை, அவர்களை மனம் திரும்பும் படியாக அழைக்கிறார்.
அப்படியாக மனம் திரும்பும் பொழுது, அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் மீட்டு தருவேன் என்று வாக்குரைக்கிறார்.
ஆம் பிரியமானவர்களே நாமும் இஸ்ரவேல் ஜனங்களைப் போல கர்த்தரை விட்டு விலகி சென்று இருக்கக்கூடும், அதனால் வெட்டுக்கிளிகள் நம் ஆசீர்வாதங்களை தின்று இருக்கக்கூடும். கர்த்தர் உங்களை நோக்கி மீண்டும் அவரிடம் வரும்படியாக அழைக்கிறார், மனம் திரும்பும் படியாக அழைக்கிறார். அப்படியாக நீங்கள் செய்யும் பொழுது வெட்டுக்கிளிகள் தின்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கர்த்தர் ஈடுசெய்வார்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி கர்த்தருக்கு முன்பாக சென்று உபவாசித்து ஒப்புக்கொடுங்கள் அப்பொழுது நீங்கள் தொலைத்த அனைத்து ஆசீர்வாதங்களையும் கர்த்தர் மீட்டு தந்து உங்களை மகிழ பண்ணுவார். இதுவே கர்த்தரின் வாக்குத்தத்தம்.