The Understanding / சுயபுத்தி

Trust in the Lord with all your heart, and lean not on your own understanding.

Proverbs 3:5

Understanding, the most critical to healthy and joyful lifestyle. Most of the time we succumb to fear and worry because of our understanding of the situation.
We understand our situation based on our sight and hearing.
We hear a bad news and immediately our understanding decides that it is going to affect us and leads us to worry and fear.
We see with our eyes a report and lean towards the understanding that's causes to panic.
But today's verse clearly instructs us to trust in the Lord with all our heart, not just part of our heart and then it says do not lean on your understanding.
Always we should remember that Lord does good to us and is with us. This should sink in our mind and make sure we don't make decisions and panic based on our understanding. Instead we should trust God with all our heart, tell Him about our situation and ask Him for help and wait patiently for His answers.
This will enable us to live peacefully and most importantly allows God to do great things for us.

உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து

நீதிமொழிகள் 3:5

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கு புரிதல் மிகவும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் நாம் சூழ்நிலைகளின் நிமித்தம் சுயபுத்தியினால் பயத்திற்கும் கவலைக்கும் ஆளாகிறோம்.
நமது பார்வை மற்றும் செவிப்புலன் அடிப்படையில் நமது நிலையைப் புரிந்து கொள்கிறோம்.
நாம் ஒரு கெட்ட செய்தியைக் கேட்கிறோம், உடனடியாக அது நம்மைப் பாதிக்கப் போகிறது என்று நம் சுயபுத்தியினால் முடிவு செய்து, கவலை மற்றும் பயத்திற்கு இடம் கொடுத்து விடுகிறோம்.
நாம் நம் கண்களால் ஒரு அறிக்கையைப் பார்க்கிறோம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் சுயபுத்தியை நோக்கி சாய்கிறோம்.
ஆனால் இன்றைய வசனம் நம் இருதயத்தின் ஒரு பகுதியை மட்டுமல்ல, முழு இருதயத்தோடும் கர்த்தரை நம்புங்கள் என்று தெளிவாக அறிவுறுத்துகிறது, பின்னர் அது உங்கள் சுயபுத்தியின்மேல் சாய்ந்து கொள்ளாதீர்கள் என்று கூறுகிறது.
கர்த்தர் நமக்கு நன்மை செய்கிறார், நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் சுயபுத்தியின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல் பீதி அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுயபுத்தியின்மேல் நம்புவதற்கு பதிலாக நாம் கர்த்தரை முழு மனதுடன் நம்பி, நம்முடைய சூழ்நிலையைப் பற்றி அவரிடம் சொல்லி, அவரிடம் உதவி கேட்க வேண்டும், அவருடைய பதில்களுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
இவ்வாறாக செய்யும் பொழுது அது நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறது, அது மாத்திரமல்ல முக்கியமாக கர்த்தர் நம் சார்பில் செயலாற்ற செய்கிறது.