The Lord will make a way / கர்த்தர் வழி உண்டாக்குவார்

I am making a way in the wilderness and streams in the wasteland.

Isaiah 43:19

We are face hurdles in our life, there are mountains that come on our life journey and blocks us from moving forward.
We try hard to push forward, we try hard to climb that mountain but only slip and fall every time we climb.
We face defeat, and become hopeless and discouraged.
But God does not give up on your dreams and desires. Sometimes the hurdles and mountains are for our own good.
These hurdles and mountain are not there to end the destiny.
People of Israel felt their end has come when they were before the Red Sea.
That is the moment when God makes a way were there is no way.
So put your trust in the Lord, He has great plans for you and will make a way through the sea and in the wilderness for you to reach your destiny and desire.

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 43:19

நாம் எல்லாரும் தடைகளை சந்திப்பதுண்டு. மலைகளும் குன்றுகளும் நம் நடந்து போகும் வாழ்க்கை என்னும் பாதையில் வந்து நம்மை தடுத்து நிறுத்த கூடும். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் சில சமயத்தில் தடைகள் விலகிப் போவதில்லை மலைகள் பெயர்ந்து போவதில்லை. ஆதலால் நாம் சோர்வுற்ற நிலைமையில் நம்பிக்கையை இழந்து போய்விடுகிறோம்.
ஆனால் கர்த்தர் நம்பிக்கையை இழப்பதில்லை. அவர் நமக்கு வைத்திருக்கிற திட்டங்கள் ஒருநாளும் தோல்வி அடைவதில்லை.
இந்த தடைகளும் மலைகளும் சில சமயங்களில் நம் நலனுக்கே.
இஸ்ரவேல் ஜனங்களும் செங்கடல் முன் நின்ற பொழுது எல்லாம் முடிந்தது என்று நினைத்தனர். ஆனால் கர்த்தர் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கென்று எதிர்பாராத ஒரு வழியை உண்டாக்கினார்.
ஆதலால் கர்த்தர் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள், நீங்கள் எதிர்பாராத ஒரு வழியை அவர் உண்டாக்கி உங்களுடைய விருப்பங்களையும் கனவுகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவரே வனாந்தரத்தில் வலியையும் அவாந்தர வெளியில் ஆறுகளையும் உண்டாக்குகிற தேவன்.