Sin Remover / பாவ நீக்கி

Hatred stirs up strife, but love covers all sins.

Proverbs 10:12

Sin, what is it? It is disobedience to God and to His ways. Bible says in Romans 5:12 that sin entered through one man Adam, when He disobeyed God.
Since then everyone born from Adam carried the sin within them.
Hatred, bitterness, jealousy, pride, anger, lust and many more such sin became active in man and woman.
Bible says that result of sin is death, that is suffering, pain, sorrow, sickness and so on.
But today's verse give us a good news. We don't have to live in this state of sin. Our LORD Jesus Christ who is love freed us from sin and has come to live inside of us.
Since He is inside of us, we have love inside us, and when we show God's love to others, the sin in them becomes ineffective and they are touched by God's love.
Also when we show God's love, we are filled with more of His love and hence sin in us becomes ineffective and is removed.
When sin becomes ineffective in us, we are blessed with goodness, joy, peace, health, abundance and so on.
Love of God is the sin remover, which is in you. Use the Love of God and remove sin in and around you.

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

நீதிமொழிகள் 10:12

பாவம் என்றால் என்ன? கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் இருப்பதே பாவம். கர்த்தரின் வழியில் நடக்காமல் இருப்பது பாவம். ரோமர் 5:12ல் பாவம் ஆதாமின் மூலியமாய் வந்தது என்று சொல்லி பார்க்கிறோம். அன் நாள் முதற்கொண்டு இன்றைக்கு வரைக்கும் ஆதாமின் மூலியமாய் பிறந்த ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாகினோம்.
பாவத்தினால் கோபம் பொறாமை பெருமை வெறுப்பு இச்சை என்ற இந்த காரியங்கள் மனிதனுக்குள் செயல்பட தொடங்கியது. அதனால் பல இன்னல்களுக்கும் போராட்டங்களுக்கும் வியாதிகளுக்கும் நாம் அடிமையாகினோம்.
ஆனால் இன்றைய வசனம் நமக்கு ஒரு நற்செய்தியை தெரிவிக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் அன்பை நமக்குள் வைத்தார். கர்த்தரின் அன்பு நமக்குள் இருக்கிற பாவங்களை செயல்படாமல் செய்கிறது. கர்த்தரின் அன்பை நாம் பிறருக்கு காண்பிக்கும் பொழுது அவர்களுடைய பாவமும் செயலற்று போகிறது.
அன்பே பாவத்தை நீக்குகிறதாய் காணப்படுகிறது.
பாவம் நீக்கப்படும் பொழுது சந்தோஷமும் சமாதானமும் நிறைவும் நம் வாழ்க்கையில் மிகுதியாய் காணப்படும்.
ஆதலால் கர்த்தரின் அன்பை நாம் காண்பித்து பிறருக்குள் இருக்கிற பாவத்தையும் நமக்குள் இருக்கிற பாவத்தையும் விளக்கிக் கொள்வோம்.