Deliverance from trouble / கஷ்டத்திலிருந்து விடுதலை

The righteous is delivered from trouble.

Proverbs 11:8

This is a promise given to the righteous, that God will deliver them from trouble all the time. This promise is only for the righteous.
So who is the righteous. Many times we think that if we walk upright and not do any wrong we are righteous.
That is not true. We are expected to walk upright and live a holy life because we are children of God.
But that does not mean we are righteous.
We are righteous only by truly repenting of our sins and accepting and believing in Lord Jesus Christ as our Savior.
For such people who have repented and accepted Jesus as Savior, this promise becomes valid.
Becoming righteous by believing in Lord Jesus Christ does not mean we will have troubles. We get into trouble of our own, God does not push us into trouble.
But the good news is God comes to our rescue, He delivers us from all trouble.
So don't be worried because of trouble, instead go to your Father in heaven and let Him know you need help and He will surely help you and deliver you from all your troubles.

நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்;

நீதிமொழிகள் 11:8

நீதிமான்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம், கர்த்தர் தாமே அவர்களை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுதலையாக்குவார் என்பதே. இந்த வாக்குத்தத்தம் நீதிமான்களுக்கு மட்டும் உரியது.
நீதிமான் என்பவன் யார்? பல தடவை நாம் சரியாய் நடந்து கொள்வதின் மூலியமாகவும் பரிசுத்தமாய் வாழ்வதின் மூலியமாகவும் நாம் நீதிமான்கள் என்று நம்மை கருதுவது உண்டு. ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்றால், ஒருவர் பாவத்திலிருந்து மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுது தான் அவர் நீதிமான் என்று கருதப்படுகிறார்.
பரிசுத்தமாயும் குற்றமில்லாமலையும் வாழ்வது கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற ஒன்று, ஆனால் அது நம்மை நீதிமானாக்குவது இல்லை. மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வதின் மூலமாக நாம் நீதிமானாக்கப்படுகிறோம்.
அப்படியாக நீதிமானாக ஆன நாம் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது இல்லை. நம்மளுடைய சொந்த தவறுகளினால் பிரச்சனைக்குள் சிக்கி தவிப்பது உண்டு.
ஆனால் நற்செய்தி என்னவென்றால், நீதிமானாகிய நமக்கு கிறிஸ்துவே நம்முடைய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுதலையாக்குகிறார்.
ஆதலால் கவலைப்படாதீர்கள், உங்கள் பிரச்சனைகளை பிதாவாகிய தேவனிடத்தில் ஒப்பு வியுங்கள் அவரே உங்களை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை ஆக்குவார், ஏனென்றால் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் நீதிமான்கள்.