Daily Bread / அன்றன்றுள்ள அப்பம்

Give us each day our daily bread.

Luke 11:3

Our Lord Jesus Christ taught us how to pray, which is called the Lord's prayer and one of the key prayer in it is "give us each day our daily bread".
What did he mean by daily bread?
In John 6:35, Jesus said I am the bread of life.
Again in John 1:1 it's says in the begining was the word and word was God and word was with God.
John 1:14 says Word became flesh and dwelt among us.
Hence from all these verse we see that Jesus who is the Word of God is the bread which gives us life.
So the verse today means, give us each day your Word, that is may your Word feed our souls and give us life each day.
When God's Word gives life to our soul then we will prosper in all things.
We all ask to be blessed each day of our life and many times see nothing happening. It is because we miss feeding the Word of God which prospers our soul, which prospers us in all we do.
May God's Word "The Daily Bread" feed you every day.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

லூக்கா 11:3

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபிப்பது எப்படி என்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அது பரமண்டலங்களின் ஜெபம் என்று அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒரு ஜெபம், அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு தாரும் என்பதே.
அன்றன்றுள்ள அப்பம் என்றால் என்ன?
யோவான் 6:35 ஏசு நானே ஜீவ அப்பம் என்று கூறியிருக்கிறார், யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது வார்த்தை தேவனாய் இருந்தது வார்த்தை தேவனோடு இருந்தது, என்றும் யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாயிற்று என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த வசனங்களை எல்லாம் பார்க்கும் பொழுது இயேசு கிறிஸ்துவே அந்த அப்பம், அவருடைய வார்த்தையே அந்த அப்பமாய் இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை நாம் தினந்தோறும் படிக்கும் பொழுது அது நமக்கு ஜீவனை தருகிறதாய் இருக்கிறது. நம் ஆத்மாவை செழிக்க வைக்கிறது. அப்படியாக நாம் இயேசு கிறிஸ்துவின் அப்பத்தை தினந்தோறும் பெற்று ஆத்துமாவை செழிக்க வைத்து ஆசீர்வாதத்துடன் வாழ்வோம்