Good word / நல்வார்த்தை

Anxiety in the heart of man causes depression, but a good word makes it glad.

Proverbs 12:25

On an average one person speaks around 16,000 words per day. Most of these words we speak it matters. It even determines how someone lives. It shapes an individuals.
Words we speak represents who we are. It shows how confident we are, how strong in faith we are, how knowledgeable we are.
Words can build and at the same time destroy what a weapon couldn't do.
That is why it is very important that we train ourselves to speak the right words all the time to build our own life and life our others around us.
Anxiety, worry, doubt, fear keeps attacking us every day of our life.
That is why God gave us the ability to counter attack all these evil forces with words of faith, words of encouragement, words of comfort which are the good words that God put within us.
These good words destroy every evil works against us and builds our lives.
Speak the good words all the time. May all the 16000 words you speak per day be good words, edifying other and building your life and life of others.

மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

நீதிமொழிகள் 12:25

ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 16,000 வார்த்தைகள் பேசுகிறார் என்று கருதப்படுகிறது. வார்த்தைகள் மிக முக்கியமானவைகள். நாம் எதைப் பேசுகிறோமோ அது நம்மளுடைய வாழ்க்கையை தீர்மானம் பண்ணுகிறதாய் இருக்கும்.
நாம் பேசுகிற வார்த்தை நம்மை குறித்தும் நம் அறிவை குறித்தும் நம் பலனைக் குறித்தும் நாம் யார் என்பதையும் அது தெரியப்படுத்தும்.
நாம் பேசுகிற வார்த்தை ஒருவரை கட்டி எழுப்பக்கூடிய வல்லமை உடையது, அதேபோல ஒருவரை அழிக்கவும் அதற்கு வல்லமை உண்டு.
ஆதலால் நல் வார்த்தைகள் பேச நாம் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பயம், சந்தேகம், கவலை என்ற காரியங்கள் நம்மை தாக்குவது உண்டு. அதனால் தான் தேவன் நமக்கு நல்வார்த்தையை தந்திருக்கிறார்.
விசுவாசத்தின் வார்த்தைகளையும், ஊக்குவிக்கிற வார்த்தைகளையும், பலப்படுத்துகிற வார்த்தையும் ஆறுதல் படுத்துகிற வார்த்தையையும் நாம் பேசும்பொழுது அது நம் வாழ்க்கையை மாத்திரமல்ல பலருடைய வாழ்க்கையை கட்டி எழுப்புகிறதா இருக்கிறது. இப்படிப்பட்ட நல் வார்த்தைகளை கர்த்தர் நமக்கு தந்திருக்கிறார்.
ஆதலால் நாம் ஒவ்வொரு நாளும் பேசுகிற 16 ஆயிரம் வார்த்தைகளும் நல்வார்த்தைகளாய், நம் வாழ்க்கையை மாத்திரமன்றி நம்மை சுற்றி இருக்கிற அனைவருடைய வாழ்க்கையை கட்டி எழுப்புகிற வார்த்தையாய் இருப்பதாக.