Passover Lamb / பஸ்கா ஆடு

Christ, our Passover, was sacrificed for us.

1 Corinthians 5:7

Passover is the most important festival in the Jewish community. Many thousands years ago, God instructed Moses to sacrifice a spotless Lamb, before leaving Egypt and before leaving the 430 years of captivity.
On the night when the Passover Lamb was sacrificed, God sent His angel to strike the Egyptians and deliver the people of Israel from the strong hand of the Egyptians.
Passover destroyed the 430 year strong hold of Egyptians against the Israelite's.
Many thousand years later, our Lord Jesus Christ Himself was sacrificed as the most spotless, blameless Passover Lamb.
This Passover Lamb when sacrificed struck the enemy the devil once for all and delivered not only the people of Israel but all who will believe on Him from the stronghold of the enemy.
Just like how the 1st Passover Lamb brought freedom and deliverance to people of Israel,
the Last Passover Lamb our Lord Jesus also brought freedom and deliverance to all.
Now in Jesus name you and I have been set free from slavery and have become vessels to receive His promises.
Your days of captivity is over and now it is time to enjoy the inheritance from the Father in heaven.
Claim all the promises of God in Christ Jesus which is now yours because of the Passover Lamb.

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே

I கொரிந்தியர் 5:7

யூதர்களுக்கு பஸ்கா ஒரு முக்கியமான பண்டிகை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக எகிப்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக கர்த்தர் மோசையை நோக்கி ஒரு ஆட்டை பலியிட சொன்னார். குறை இல்லாத ஆட்டை இஸ்ரவேல் ஜனங்கள் யாவரும் பலியிட்ட பிறகு கர்த்தரின் தேவதூதன் எகிப்து ஜனங்களை தாக்கி இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனம் என்ற அந்தக் கடும் பிடியிலிருந்து தப்பிக்க செய்தான்.
430 ஆண்டுகள் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் இந்த பஸ்கா என்ற ஆட்டை பலியிட்ட பிறகு அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டார்கள்.
எகிப்தியரின் பலமான கைப்பிடியில் இருந்து மீட்கப்பட்டார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே குறையில்லாத குற்றம் இல்லாத பஸ்கா ஆடாக சிலுவையில் பலியானார்.
அவ்வாறாக அவர் பலியான போது இஸ்ரவேல் ஜனங்களை மாத்திரம் அல்ல அவரை விசுவாசிக்கிற அனைவரையும் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கினார். பிசாசின் கட்டுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அனைத்து ஜனங்களையும் தம்மை விசுவாசிக்கிற அந்த விசுவாசத்தின் மூலமாக அவர் மீட்டெடுத்தார். அது மாத்திரமல்ல சுதந்திரமான ஒரு ஜீவியத்தையும் பாலும் தேனும் ஓடுகிற இடத்தையும் அவர் தந்தார். இன்றைக்கு நீங்களும் நானும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவே பஸ்காவின் ஆடாய் பலியாய் நம்மளை மீட்டெடுத்து இருக்கிறார். கர்த்தரின் அனைத்து வாக்குத்தத்தங்களும் உங்களுக்கு உரியவைகள். ஆதலால் கர்த்தர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை உரிமை கொண்டாடுங்கள் அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் விசுவாசத்தின் மூலமாக பெற்று ஆசீர்வாதம் அடையுங்கள். இனி நீங்கள் அடிமைகளாய் இருப்பதில்லை ஏசுவின் பிள்ளைகளாய் கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் சுதந்திரமாய் இருந்து ஜெயம் எடுப்போமாக. பஸ்கா ஆடாக்கிய இயேசுவை எப்பொழுதும் நாம் நினைவுகூர்ந்து நடப்போமாக.