Broad Place / விசாலமான இடம்

He also brought me out into a broad place; He delivered me because He delighted in me.

2 Samuel 22:20

From the time prophet Samuel anointed David to the time he became king it took 15 years. David had a miserable life during those 15 years, running and hiding from king Saul. He had no home of his own, nor a was able to be with his family. The entire world around him was uncertain.
But God who promised David the kingship was faithful.
In this chapter David praises God for all the victories He has given him and making him the king.
Through all the misery, pain and uncertainty, God didn't forgot David. Until now in history of Israel, David is the most successful king.
Today you may be like David, surrounded by misery, pain, disappointment, uncertain.
Don't be discouraged. God whom you worship, our Lord Jesus Christ is faithful. He will never fail. He is always at the right time.
Like He brought David to a broader place, He will also bring you out of your misery into a broader place, because He delights in you.

என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

2 Samuel 22:20

சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை அபிஷேகித்த பிறகு அவர் ராஜாவாவதற்கு 15 ஆண்டுகள் ஆயிற்று. அந்த 15 ஆண்டுகளாய் தாவீது பல இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தார். தனது உயிருக்கு தப்பி சவுல் ராஜாவின் கைகளில் இருந்து 15 ஆண்டுகளாய் அவர் ஓடினார். அவருக்கென்று சொந்தமான வீடோ சொந்தமான இடமோ இல்லாமல் அலைந்து திரிந்தார். தன் குடும்பத்தினரோடு இருக்க முடியாத ஒரு சூழ்நிலை.
ஆனால் வாக்குத்தத்தம் பண்ணின தேவன் உண்மையுள்ளவர்.
இன்றைய இந்த அதிகாரத்தில் தாவீது தேவன் தமக்கு செய்த மகா பெரிய காரியங்களுக்காய் அவரைப் போற்றி பாடுகிறார்.
துன்பமான துயரமான நேரங்களில் கர்த்தர் தாவீதை மறக்கவில்லை. கர்த்தர் தாவீதை ஒரு மாபெரும் அரசனாய் நிலைநாட்டினார். இதுவரை இஸ்ரவேலின் வரலாற்றில் தாவீதைப் போல வெற்றியுள்ள ஒரு ராஜா இருந்தது இல்லை.
நீங்களும் இன்றைக்கு தாவீதைப் போல துன்பத்திலும் துயரத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கக்கூடும். திடன் கொள்ளுங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை மறப்பதில்லை.
தாவீது ராஜாவை விசாலமான இடத்திற்கு அழைத்து வந்தது போல உங்களையும் அவர் விசாலமான இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். உங்களை கணப்படுத்துவார். வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர். கர்த்தர் உங்கள் மேல் பிரியமாய் இருக்கிறார்.