Deception / வஞ்சகம்

Take heed no one deceives you.

Mark 13:5

Three days before crucifixion, Lord Jesus Christ warned his followers to be watchful and alert from deception in the last days.
Deception has been the number one enemy from the beginning. Adam and Eve was cast out from God's glory because of deception. Instead of believing what God said, they opened their hearts to other teachings and hence got deceived.
Unlimited free access to social media attracts us to various teachings about the Kingdom of God and Lord Jesus Christ. Some are good and anointed teaching but not all.
Knowing about all this two thousand years ago, our Lord Jesus warned us to be watchful.
So how to guard from deception. The only way is to have a close relationship with Lord Jesus Christ.
Reading the bible every day personally and believing what is written in it, than believing on what many teach about the bible.
Fellowship with the Holy Spirit is very important.
The more we do this everyday, the more watchful we will be and will not be carried away by deception.
So today guard yourself. Know your bible and spend as much time you can reading God's Word. Which alone will protect you from being deceived.


இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

மாற்கு 13:5

சிலுவையில் அறையப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாய் இருங்கள் என்றார். இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து பேசின முக்கியமான வார்த்தை இது.
ஏதேன் தோட்டத்திலிருந்து இந்த வஞ்சகம் என்ற காரியம் ஆதாமையும் ஏவாளையும் தேவனின் மகிமையிலிருந்து வெளியேறச் செய்தது. தேவனின் வார்த்தையை விசுவாசிக்காமல் அவர்கள் மற்ற போதனைகளுக்கு இடம் கொடுத்த படியினாலே வஞ்சிக்கப்பட்டார்கள்.
இன்றைக்கும் அதே போன்று சமூக ஊடகம் மூலமாய் பல போதனைகளை நாம் கேட்கக்கூடும், அதில் சில போதனைகள் நல்லதாயும் சில போதனைகள் வஞ்சிக்கிறதாயும் இருக்கக் கூடும்.
அதனால் தான் இதை அறிந்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பாகவே நம்மை எச்சரித்து இருக்கிறார்.
இப்படியான கடைசி கால வஞ்சனையின் காரியங்களிலிருந்து எப்படி நாம் நம்மை காத்துக் கொள்வது? அதற்கு ஒரே வழி ஒவ்வொரு நாளும் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு நேரத்தை செலவழிப்பது. அவருடைய வேத வார்த்தையை ஒவ்வொரு நாளும் தியானிக்கும் பொழுதும் ஆவியானவரோடு ஐக்கியம் கொண்டிருக்கும் போதும், நாம் நம்மை வஞ்சிக்கிற காரியங்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
ஆதலால், உங்கள் வேதத்தை படித்து நன்றாய் அறிந்து கொள்ளுங்கள், அதுவே உங்களை வஞ்சனையிலிருந்து காப்பாற்றும்.