Remain in love / அன்பில் நிலைத்திருங்கள்

As the Father has loved me, so have I loved you. Now remain in my love.

John 15:9

Remaining in God's love is crucial, but what it means to remain in love. The next verse gives us the answer.
If we keep or obey and do what He says, then we continue to be in His love and live in God's love.
This kind of lifestyle keeps us guarded and safe from every trap and temptation and deception of the enemy.
Remaining is God's love makes Him to hear our prayers and answer it.
Remaining in God's love makes us much closer to Him and no harm will touch us.
Remaining in God's love washes away all of our sins everyday.
Remaining in God's love enables us to love others and ourselves.
Remaining in God's love will shut doors to fear, doubt, unbelief, jealousy, hatred,forgiveness
Remaining in God's love will open our eyes to His will.
We have just scratched the surface, there is much more when we remain and continue in God's love.
So today and tomorrow and dayafter and all through your life remain in God's love to be blessed abundantly.

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

யோவான் 15:9

தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பது ஒரு முக்கியமான காரியம். ஆனால் தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பது என்றால் என்ன. அடுத்த வசனம் அதற்கு பதிலை நமக்கு தருகிறது. கர்த்தருடைய கட்டளைகளை நாம் கை கொள்ளும் பொழுது தேவனின் அன்பில் நாம் நிலைத்து இருக்கிறோம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பில் ஜீவிக்கிறோம்.
இப்படியான வாழ்வு முறை சத்ருவின் பல பொல்லாங்கான திட்டங்களிலிருந்தும் ஆபத்துகளில் இருந்தும் நம்மளை காக்கிறது.
கர்த்தரின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது நம் ஜெபங்களை அவர் கேட்டு பதில் தருகிறார்.
கர்த்தருடைய அன்பில் நிலைத்திருக்கும் பொழுது அவரோடு நெருங்கி இருக்கிறோம் ஆதலால் எந்த ஆபத்தும் நம்மை அணுகுவது இல்லை.
கர்த்தரின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது நம் பாவங்கள் எல்லாம் கழுவப்படுகின்றது.
கர்த்தரின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது பிறரை நேசிக்க முடிகிறது.
கர்த்தரின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது பயமோ சந்தேகமோ குழப்பமோ வெறுப்போ பொறாமையோ நம்மிடத்தில் இருப்பதில்லை.
கர்த்தருடைய அன்பில் நிலைத்திருக்கும் பொழுது நம் கண்கள் பிதாவின் சித்தத்தை பார்க்க திறக்கப்படுகிறது.
இதுவரை மேலோட்டமாக தான் கர்த்தரின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது நமக்கு கிடைக்கிற நன்மைகளை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் ஆழமான காரியங்கள் உண்டு. கர்த்தரின் அன்பில் தொடர்ந்து இருக்கும் பொழுது இந்த ஆழமான காரியங்கள் நமக்கு தெரியும்.
ஆதலால் இன்றிலிருந்து வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய அன்பில் நிலைத்திருங்கள், அவரிடம் இருந்து எண்ணி முடியா நன்மைகளை பெறுங்கள்.