Doubt / சந்தேகம்

Assuredly, I say to you, if you have faith and do not doubt, you will not only do what was done to the fig tree, but also if you say to this mountain, ‘Be removed and be cast into the sea,’ it will be done.

Matthew 21:21

Doubt (unbelief), is our friend, counselor, guide most of the time in our Christian life. In fact it becomes our inseperable companion.
Doubt or unbelief is the enemy to miracles, breakthrough and God's hand of deliverance.
Doubt or unbelief prevents God from doing the miracles.
In Matthew 13:58 we read that Jesus came to his hometown and the people there didn't believe on Jesus and hence he only did few miracles.
On the other hand faith forces God to do miracles.
Most of the time we have faith but still don't see a breakthrough because of the doubt element that still very small hidding in us.
The only way to remove doubt is to be immersed in God's word. Romans 10:17 says faith comes by hearing God's word and also removes doubt.
Today you have the power to speak to all your mountains (sickness, financial, relationship), and command it to be removed and cast into sea. That power is faith with no doubt.
This promise is for sure and for you to use and be victorious.

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 21:21

நம்மளுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சந்தேகம் ஒரு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் கூட இருந்து கொண்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். இணை பிரியா துணையாக சந்தேகம் நம்மிடம் இருந்து செயல்படுகிறது.
கர்த்தர் அற்புதம் செய்வதற்கும் விடுதலை தருவதற்கும் சந்தேகம் தடையாய் இருக்கிறது. கர்த்தருடைய அற்புதத்திற்கு சந்தேகம் எதிரியாக நிற்கிறது. இதே சந்தேகம்தான் இயேசுவை அற்புதம் செய்யவிடாமல் செய்தது. இதை நாம் மத்தேயு 13:58 இல் வாசிக்கிறோம்.
ஆனால் மறுபுறம் விசுவாசமானது கர்த்தரை அற்புதம் செய்ய தூண்டுகிறது. பல தடவை நாம் விசுவாசத்தில் இருந்தும் அற்புதம் காணாமல் இருக்கக்கூடும், ஏனென்றால் சந்தேகம் என்ற அந்த காரியம் நமக்குள் அந்த அற்புதத்தை தடை செய்கிறது.
இந்த சந்தேகத்தை முழுமையாக நீக்குவதற்கு ஒரே வழி தேவனுடைய வார்த்தையை நாம் இரவும் பகலும் தியானிக்கும் பொழுது தான். இது ரோமர் 10:17 இல் கூறப்பட்டிருக்கிறது .
இன்றைக்கு உங்களிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற வல்லமையை வைத்து உங்கள் வியாதி கடன் பிரச்சனைகள் என்ற மலைகளை நோக்கி விசுவாசத்துடன் பெயர்ந்து போ என்று கட்டளை இடுங்கள். முழு விசுவாசத்துடன் இதை செய்வீர்கள் என்றால் அது நிச்சயமாகவே நிறைவேறும்.