Knowing God's ways / கடவுளின் வழிகளை அறிவது

What I am doing you do not understand now, but you will know after this.

John 13:7

How to know God's ways? how to know what is God trying to do in your life currently? especially when you are in a midst of struggle, pain and storm.
Most of the time we are confused and couldn't understand what God is doing. We question whether He is there and knows what we go thru' in life.
We start doubting. We start panicking.
But in today's verse Jesus clearly says "What I am doing, you do not understand now, but you will know in the days to come.
Yes, most of the time, we do not understand what God is doing in our life at the very moment of pain, defeat, disappointment, sorrow.
He does not give us that understanding to know His ways, but rather wants us to just trust in Him with all of our heart and not lean and belief and make decisions based on what we see, hear and feel.
God whom we worship is a good God and He always does good for us.
Trusting blindly is the only way to know God's ways and when we do we will understand what He is doing in days to come. Later on it becomes clear for us and we will be able to realize it is all for good.
So whatever going on in your life, Trust with all your heart that God is doing good in all that you go through. This will give you peace. You will know soon and understand His ways.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

யோவான் 13:7

கர்த்தருடைய வழிகளை எப்படி அறிவது? இன்றைக்கு நம் வாழ்க்கையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எப்படி தெரிந்து கொள்வது? முக்கியமாக நம் கஷ்டத்தின் பாதையிலும் துயரத்தின் பாதையிலும் ஏமாற்றத்தின் பாதையிலும் கடந்து செல்லும் பொழுது கர்த்தர் என்ன செய்ய விரும்புகிறார் என்று எப்படி அறிந்து கொள்வது.
பல தடவை நாம் குழம்பிவிடுகிறோம், கர்த்தர் என்ன செய்கிறார் என்று சொல்லி அறியாமல் திகைத்துப் போய் கலக்கத்துடன் இருக்கிறோம். கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறாரா என்ற சந்தேகம் எழும்ப ஆரம்பிக்கிறது, கர்த்தர் என்னை கவனிக்கிறாரா, அன்பாய் இருக்கிறாரா, என்று கேள்வி எழும்பு ஆரம்பிக்கிறது.
ஆனால் இன்றைய வசனத்தில் இயேசு இவ்வாறாக கூறியுள்ளார், "நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்" என்றார்.
பிரியமானவர்களே நாம் வணங்கும் தேவன் நன்மைகளை நமக்கு செய்கிறவர், ஒருபோதும் தீமையை எண்ணாதவர்.
ஆதலால் முழு மனதாய் எந்த சூழ்நிலையிலும் அவரை நாம் நம்புவது அவர் வழியை அறிந்து கொள்வதற்கு சமம். இன்றைக்கு கர்த்தருடைய வழிகளை நீங்கள் அறியாமல் இருக்கலாம், ஆனால் பின்பு நீங்கள் திரும்பிப் பார்க்கும் பொழுது கர்த்தருடைய வழிகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆதலால் எந்த சூழ்நிலையானாலும் கர்த்தரை முழுமனதாய் நம்புங்கள், நீங்கள் காண்கிறதை வைத்து, கேட்கிறதை வைத்து, உணர்கிறதை வைத்து உங்கள் சூழ்நிலையை எண்ணாதிருங்கள். கர்த்தர் எல்லா சூழ்நிலையிலும் உங்கள் வாழ்க்கையில் நல்லதை செய்து கொண்டிருக்கிறார். இந்த சமாதானத்துடன் இருங்கள். கர்த்தர் உங்கள் காரியத்தை வாழ்க்கை செய்வார்.