Act of receiving / பெறும் செயல்

And whatever you ask for in prayer, having faith and [really] believing, you will receive.

Matthew 21:22

Receiving answers to the prayers is an act of faith. The moment we pray and submit our request to the heavenly Father in the name of Jesus Christ our Lord, God hears it and see our prayer envelope with a stamp of faith.
Only prayers envelope with stamp of faith is opened and read and action is taken based on the request.
That is why Jesus said, whatever you ask in prayer, have faith, stamp the prayer envelope with faith, believing that what you have asked in prayer God will answer and give it to you.
Prayer is not just asking, it should be accompanied by an action called faith.
Faith is the confidence that you have already received the answer.
It is like asking your friend for help in dropping your child at school and not doubt whether he has dropped your child in school or not. You know for sure he did.
Pray as though you have received and it will be yours.

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

மத்தேயு 21:22

ஜெபத்தினால் பதிலை பெறுவது விசுவாசத்தினால் செயல்படுகிற ஒரு காரியம். நாம் ஜெபத்தினால் கோரிக்கையை பிதாவின் இடத்தில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஏறெடுக்கும் பொழுது, பிதாவானவர் அந்த ஜெபத்தை கேட்டு அதில் விசுவாசம் என்ற முத்திரை இருக்கிறதா என்று சொல்லி பார்த்த பிறகு அந்த ஜெபத்திற்குரிய பதிலை அனுப்புவதற்கு செயலாற்றுகிறார்.
விசுவாசம் முத்திரை உள்ள ஜெபக்கடிதமே பரலோகத்தில் திறக்கப்பட்டு பதில் பெற செயல்படுகிறது.
அதனால் தான் இயேசு கிறிஸ்து விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபித்து கேட்டவைகளை பெற்றுக் கொண்டோம் என்று சொல்லி விசுவாசியுங்கள் என்றார்.
விசுவாசம் என்பது பெற்றுக்கொண்டோம் என்ற உறுதியே.
உங்கள் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுவதற்கு உங்கள் நண்பனிடம் நீங்கள் உதவி கேட்கும் பொழுது உங்கள் நண்பன் உங்கள் குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார் என்ற அந்த உறுதியான விசுவாசம் எப்படியோ அதே போன்ற விசுவாசம் தான் தேவனிடத்தில் கேட்கும் பொழுது இருக்க வேண்டும்.
ஆதலால் இன்றைக்கு பெற்றுக் கொண்டேன் என்று உறுதியாய் விசுவாசித்து ஜெபியுங்கள் அப்படியாக ஜெபிக்கும் பொழுது நீங்கள் ஜெபித்த காரியம் உங்களுக்கு கொடுக்கப்படும்.