Life giving Spirit / ஜீவன் தரும் ஆவியானவர்

It is the Spirit who gives life; the flesh profits nothing. The words that I speak to you are spirit and they are life.

John 6:63

From the beginning of time Holy Spirit has done great and mighty works. Be it in the creation of the universe, empowering mighty men in the bible like Samson, David, Elijah, raising Christ from the dead, and convicting and leading us to salvation, the works of the Holy Spirit has been marvelous and unimaginable.
This same Holy Spirit has been given to us when we truly believe in the name of the Lord Jesus Christ.
This same Holy Spirit lives inside of us and gives us life.
Every word that Lord Jesus Christ spoke, Holy Spirit gave life, that is, it made the Word of God powerful and work in our lives.
Hence it is important to get the help of the Holy Spirit and engage Him in everything we do, mainly while reading the Word of God and trying to understand it.
Holy Spirit is the author of all scriptures and no one can give life or make you understand the Word of God like the Holy Spirit.
And when He makes you understand the Word of God, it makes you powerful to overcome by faith.
You cannot do this in flesh, you need the Holy Spirit, who is freely given to help you. He is life giver.

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

யோவான் 6:63

உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே ஆவியானவர் மகிமையான பெரிய காரியங்களை செய்து கொண்டிருந்திருக்கிறார். உலகத்தை படைக்கிற காரியம் ஆனாலும் சரி, வல்லமையை மனிதர்களுக்கு தரக்கூடிய காரியமானாலும் சரி, கிறிஸ்துவை உயிரோடு எழுப்பின காரியம் ஆனாலும் சரி, நாம் எல்லோரையும் இரட்சிப்பில் வழி நடத்துகிற காரியம் ஆனாலும் சரி, இவைகள் அனைத்துமே ஆவியானவரினால் செய்யப்பட்ட காரியங்கள்.
நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஆவியானவர் நமக்குள் வந்து வாசம் செய்கிறார்.
எதற்காக, நமக்கு உதவி செய்வதற்காக.
கர்த்தர் பேசின ஒவ்வொரு வார்த்தைகளையும் வேதத்தில் இருக்கிற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஜீவன் தருகிறவர் ஆவியானவர். வேதத்தை வாசிக்கும் பொழுது ஆவியானவரை அணுகி இந்த வசனங்களுக்குரிய அர்த்தங்களை அவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளும் பொழுது அந்த வேத வசனத்தின் வல்லமை நமக்குள் செயல்பட ஆரம்பிக்கிறது. அதனால் நாம் எந்த காரியத்தையும் மேற்கொள்வதற்கு வேண்டிய பலனும் விசுவாசம் நமக்கு கிடைக்கிறது. இன்றைக்கு தேவனுடைய வார்த்தைக்கும் நம் வாழ்க்கைக்கும் ஜீவன் தருகிறார் ஆவியானவரை ஒவ்வொரு சமயமும் அணுகி அவரிடத்தில் இருந்து உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். ஆவியானவர் தாமே உங்களை வெற்றியுள்ள வாழ்க்கையை வாழ செய்வார். அவரே ஜீவன் தருகிறவர்.