Nothing will be hidden / ஒன்றும் மறைக்கப்படுவதில்லை

For we must all appear and be revealed as we are before the judgment seat of Christ, so that each one may receive [his pay] according to what he has done in the body, whether good or evil [considering what his purpose and motive have been, and what he has achieved, been busy with, and given himself and his attention to accomplishing].

2 Corinthians 5:10

Apostle Paul reveals to us about a most important event, which is the Judgement seat of Christ. what is it? After rapture, that is when Lord Jesus Christ comes back and takes His Church (you and me who believed and truly lived for Him) to heaven with Him, we are brought before to be judged by Christ.
Now this judgement is not to be condemned or punished but to be reward for the work we have done for Christ.
Only believers in Christ appear before Judgement seat of Christ.
In the verse today Apostle Paul states another great truth. We not only are judged and hence rewarded, but before that all we did in our life on earth, both good and bad will be revealed or shown before Christ. Nothing will be hidden.
The anger and hatred we showed against others and also the repentance and forgiveness we asked will all play as a picture before.
It is very important that everyday we read this verse and watch our actions, words we speak and thoughts we think.
Let us be blameless, let our actions and thoughts be about achieving things for Christ, may we become busy doing the works of Christ and accomplish the goals that Christ has for us.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

II கொரிந்தியர் 5:10

அப்போஸ்தல பவுல் ஒரு முக்கியமான காரியத்தை வெளிப்படுத்துகிறார். அது என்னவென்றால், ரகசிய வருகையில் கர்த்தர் தம்மை உண்மையாய் விசுவாசித்த விசுவாசிகளை பரலோகத்திற்கு கொண்டு போன பிறகு அவர்களை தனக்கு முன்பாக நியாயம் தீர்ப்பதற்காக கொண்டு வருகிறார் என்பதே.
இந்த நியாய தீர்ப்பு குற்றப்படுத்துவதற்காக அல்ல அதற்கு பதிலாக பலனை அளிப்பதற்காக.
கர்த்தர் தம்மை விசுவாசித்தவர்களை அவருக்கு முன்பாக நியாயம் தீர்ப்பதற்காக கொண்டு வந்து நிறுத்தும் பொழுது அவர்கள் வாழ்வில் செய்த ஒவ்வொரு நல்ல காரியமும் கெட்ட காரியமும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆம் நீங்களும் நானும் இந்த பூமியில் ஒவ்வொரு நாளும் செய்த காரியங்கள் பேசின வார்த்தைகள் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் ஒரு புகைப்படத்தை போல கர்த்தருக்கு முன்பாக காண்பிக்கப்படுகிறது.
ஒன்றும் மறைக்கப்படுவது இல்லை.
நாம் பிறர் மேல் காட்டின கோபமும், வைத்த வெறுப்பும் அதனால் மனம் திரும்பி மன்னிப்பு கேட்டதும் அவருக்கு முன்பாக காண்பிக்கப்படும்.
ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இந்த வசனத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் நம்மளுடைய செய்கைகளையும் வார்த்தைகளையும் சிந்தனைகளையும் கர்த்தரை மகிமைப்படுத்துகிற காரியமாக வைத்துக் கொள்வது அவசியமாய் இருக்கிறது.
நாம் ஒரு குற்றமற்ற வாழ்க்கையை வாழ்வோம். கர்த்தருக்கு முன்பாக நிற்கும் பொழுது நம்மளுடைய வாழ்க்கை அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிற வாழ்க்கையாய் காண்பிக்கப்படட்டும் ஆமென்.