Receive your reward / வெகுமதியை பெற்றுக் கொள்ளுங்கள்

Look, I am coming soon! My reward is with me, and I will give to each person according to what they have done.

Revelation 22:12

Our God is a rewarder. He does not approach us empty handed. He is a gift giver. He is a just God, He rewards those justly who have labored.
The greatest reward He has given is salvation and eternal life and it is not for everybody, it is and was given to those who accepted Jesus as Lord and Savior.
The reward is not only for eternal life but in this life we live.
God rewards us for all of our righteous actions.
That is why Lord Jesus Christ said in Luke 6:38 "Give and it shall be given unto you pressed down shaken together running over and put in your lap"
This month, is a month of reward, month of pay day for all your labor for the Lord.
If you have given your resources and time to the Lord you will get it back multifold,
If you have forgiven others who have done wrong to you, you will be forgiven by the Father in heaven,
If you have shown mercy to others, your will receive abundant mercy from Lord Jesus Christ,
If you have encouraged and prayed for someone in their difficult times, you will be encouraged and Lord Jesus Himself will pray on your behalf.
If you have served the Lord with gladness, then you will receive His abundant goodness, mercy, grace and favor pressed down, shaken together running over and put in your lap.
Received God's reward this month for all your labor in His Kingdom.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:12

நம் கர்த்தர் வெகுமதி அளிக்கிறவர். அவர் ஒருபோதும் வெறுங்கையாய் நம்மை அணுகுவதில்லை. அவர் நீதியின் தேவன். தனக்காக உண்மையாய் வேலை செய்தவர்களுக்கு வெகுமதியை அளிக்கிறவர். கர்த்தர் ஏற்கனவே அவரை விசுவாசித்த நம் எல்லோருக்கும் இரட்சிப்பும், நித்திய ஜீவன் என்ற மிகப்பெரிய வெகுமதியை தந்திருக்கிறார். அவர் நித்தியத்திற்கு மாத்திரமன்றி இந்த உலகத்திற்கு உரிய வெகுமதிகளையும் தருகிறவராய் இருக்கிறார்.
நாம் செய்கிற அனைத்து நல்ல நீதி நிறைந்த காரியங்களுக்கு வெகுமதியும் உண்டு. இதைத்தான் லூக்கா 6:38தில் இயேசு கூறியிருக்கிறார், "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடப்படும்"
இந்த மாதம் வெகுமதியை பெறுகிற மாதம். நீங்கள் கர்த்தருக்கு என்று செய்த வேலைக்கு பலனைப் பெறுகிற மாதம்.
உங்களிடத்தில் இருக்கிறவைகளையும், உங்கள் நேரத்தையும் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்திருப்பீர்கள் ஆனால், அதை பல மடங்கு கர்த்தர் உங்களுக்கு திருப்பி தருகிற மாதம்.
உங்களுக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை மன்னித்து இருப்பீர்கள் ஆனால், கர்த்தரின் மன்னிப்பை பெற்றுக் கொள்ளுகிற மாதம். மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்திருப்பீர்கள் ஆனால், கர்த்தரின் இரக்கத்தை பெற்றுக் கொள்கிற மாதம். மற்றவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்காக ஜெபித்திருப்பீர்கள் ஆனால், இயேசு தாமே உங்களை இந்த மாதம் உற்சாகப்படுத்தி உங்களுக்காக ஜெபிக்கிற மாதம். கர்த்தரை முழுமனதாய் சேவித்திருப்பீர்கள் ஆனால், அவருடைய இறக்கத்தையும் அன்பையும் தயவையும் அழுகி குலுக்கி சரிந்து உங்கள் மடியில் விழும்படி செய்கிற மாதம்.
ஆதலால் கர்த்தருக்கென்று நீங்கள் பிரயாசப்பட்டதற்குரிய அனைத்து பலனையும் இந்த மாதம் பெறுவீர்கள். ஆமென்.