The Controller/கட்டுப்படுத்துபவர்

Jesus Christ is before all things, and in Him all things hold together.

Colossians 1:17

We all love to have control over everything in our life. We many times think we have control over our children, job, situation but to our disppointment we find out in a hard way that we don't have control over many things.
There are countless things that happen around us that are not know to us.
We wish many times we would have known how to handle a situation before it even happened.
Today's verse gives us an important piece of information about how we can control our situation and circumstances even before it unfolds.
It is through our Lord and Savior Jesus Christ.
Bible says that He holds all things together, in other words He controls all things.
Nothing happens without His knowledge.
Hence be it children, job, family, friends, enemy, and any or all situation, we can control them through Christ Jesus.
When we pray, Lord Jesus Christ acts on our behalf. He knows all things. He knows the heart of everyone, He knows what everyone thinks.
Nothing is hidden from Him.
So let your master and Lord Jesus Christ control all that belongs to you and it will all be perfect.

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

கொலோசெயர் 1:17

நம் வாழ்க்கையில் நடக்கிற எல்லா காரியங்களையும் கட்டுப்படுத்துவதற்கு நமக்கு விருப்பம் உண்டு. நம்மளுடைய குழந்தைகளின் காரியங்கள் ஆனாலும் சரி, வேலை காரியங்கள் ஆனாலும் சரி, நண்பர்களின் காரியங்கள் ஆனாலும் சரி, சூழ்நிலைகள் ஆனாலும் சரி, எல்லாவற்றையும் நம்மளுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது நம்மளுடைய விருப்பமாய் இருக்கிறது. ஆனால் பல தடவை நாம் ஏமாற்றமடைகிறோம். பல தடவை நம்முடைய காரியங்களை நாம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியாமல் தவிக்கிறோம்.
இன்றைய வேத வார்த்தை நமக்கு ஒரு நற்செய்தியை அறிவிக்கிறது.
இன்றைய வேத வார்த்தை எப்படி நம்மளுடைய காரியங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்று சொல்லி நமக்கு அறிவிக்கிறது.
அது இயேசு கிறிஸ்துவின் மூலியமாகவே. நம்மளுடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் அவருக்குள் நிலை நிற்க செய்கிறார். அவருடைய அனுமதி இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை.
ஆதலால் ஜெபத்தின் மூலியமாக நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு பற்றிக் கொள்வோம். நம்மளுடைய பிள்ளைகள், வேலை, சூழ்நிலைகள் எல்லாம் நம்மளுடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடும், எப்பொழுது நாம் இயேசு கிறிஸ்துவின் கைகளில் நம்மளுடைய காரியங்களை ஒப்படைக்கும் பொழுது.
இன்றைக்கு அப்படியே அனைத்து காரியங்களையும் அவருடைய கைகளில் ஒப்படைப்போம். இயேசு கிறிஸ்து தாமே நம்மளுடைய எல்லா சூழ்நிலைகளையும் காரியங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பாராக. ஆமென்