Make your word work for you / வார்த்தையை உங்களுக்கு வேலை செய்ய வையுங்கள்

Out of the same mouth come praise and cursing. My brothers and sisters, this should not be.

James 3:10

Once we accept Jesus as Lord and Savior and become God's children, it is important what we say.
When we become God's children, we become the target of the enemy the devil and he comes in various ways to tempt us and find fault with us and make us stumble and fall.
We should be careful what we speak, especially about others, because the very words we speak will judge us.
We speak praise to our God and out of the same mouth utter words of anger, disbelief, and even sometimes filthy language.
These ungodly words that come out of our mouth becomes our own enemy.
Hence it is important that we watch and guard our mouth. We need to discipline ourselves to speak always words of praise to our God the Father, words of worshiping God the Father, words that will encourage others and not break others, words of Faith and not words of disbelief, words of hope and not words of discouragement, words of peace and not words of anger, words of blessing and not words of curse.
For the very words we speak will either work for us or work against us.
Make your very words work for you, for your own benefit, by speaking Godly words, declaring the scriptures all the time and shut every door to the enemy the devil.

வார்த்தையை உங்களுக்கு வேலை செய்ய வையுங்கள்

துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

யாக்கோபு 3:10

கர்த்தரை ஏற்றுக் கொண்ட பிறகு நாம் அவருடைய பிள்ளைகள் ஆகிறோம். அதற்குப்பின் நாம் என்ன வார்த்தைகளை கூறுகிறோம் என்பது முக்கியமானது.
கர்த்தருடைய பிள்ளைகளாக ஆன பிற்பாடு நாம் சத்துருவின் இலக்குகளாக மாறுகிறோம். அவன் நம்மை எப்பொழுது விழுங்கலாம் என்று சொல்லி சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவன் நம்மை சோதித்து, நம்மிடத்தில் குற்றம் கண்டு, நம்மை விழ வைக்கிறதில் நோக்கமாய் இருக்கிறான்.
ஆதலால் நாம் என்ன வார்த்தை பேசுகிறோம் என்பது முக்கியமானதாய் இருக்கிறது.
கர்த்தரை துதிக்கிற அதே வாயிலிருந்து நாம் கோபத்தின் வார்த்தைகளையும், அவிசுவாசத்தின் வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் பேசும்பொழுது, அந்த வார்த்தைகளே நமக்கு எதிரியாக மாறுகிறது.
ஆதலால் நம் வாயை கட்டுப்படுத்துவது முக்கியமானது. நாம் எப்பொழுதும் கர்த்தருடைய துதியை சொல்லுகிறவர்களாயும், கர்த்தரை ஆராதிக்கிற வார்த்தையை கூறுகிறவர்களாயும், மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும், இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தை விசுவாசத்தின் வார்த்தையாயும், சமாதானத்தின் வார்த்தையாயும் ஆசீர்வதிக்கிற வார்த்தையாயும் மாத்திரமே இருக்க வேண்டும்.
நாம் பேசுகிற வார்த்தை நமக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ வேலை செய்யக்கூடும், அதனால் நாம் நல்ல கர்த்தரின் வார்த்தையை பேசி அது நமக்கு சாதகமாக வேலை செய்ய வைப்போமாக.