Will make a road / வழியை உண்டாக்குவேன்

I will make a road in the wilderness and rivers in the desert.

Isaiah 43:19

Isaiah 43 is one of the greatest chapters in the bible. It reminds us that we are called and cherry picked by God. We are HIS. He owns us and has made a covenant to take care of us and do good to us.
This is the same message he conveys to people of Israel. He says in the beginning of this chapter "Fear not for I have redeemed you; I have called you by your name; You are mine.
And He goes on to say later in the chapter, "Do not remember the former things, behold I will do a new thing, I will make a road in the wilderness and rivers in the desert.
Yes, beloved in Christ, God is telling you He will make a way were there seems to be no way.
Do not ponder over the past and current failure, problems, disappointments and situations in life. Keep your eyes fixed on Jesus who is the author of your faith.
He will make a road for you in wilderness, which means in unexpected way. Not in the way you think.
God is not limited by our understanding.
So expect the unexpected. God is for you. He will make a road in impossible places, through impossible situations.
Because He cares for you.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 43:19

ஏசாயா 43 வேதத்தில் முக்கியமான ஒரு அதிகாரம். நாம் கர்த்தரால் தெரிந்து கொள்ள பட்டிருக்கிறோம் என்பதை இந்த அதிகாரம் நினைவூட்டுகிறது. நாம் கிறிஸ்துவுக்குரியவர்கள், அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மைக் கவனித்துக்கொள்ளவும் நமக்கு நன்மை செய்யவும் உடன்படிக்கை செய்திருக்கிறார் என்பதை இந்த அதிகாரம் கூறுகிறது.
இஸ்ரவேல் மக்களுக்கும் அவர் சொல்லும் செய்தியும் இதுதான். இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் கர்த்தர் கூறுகிறார், "பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்."
மேலும் அவர் பின்னர் கூறுகிறார், "முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம், இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்,நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஆம், கிறிஸ்துவில் பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு இல்லாத ஒரு வழியை உருவாக்குவேன் என்று வாக்களிக்கிறார்.
வாழ்க்கையில் கடந்த கால மற்றும் தற்போதைய தோல்விகள், பிரச்சனைகள், ஏமாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் நம்பிக்கையின் ஆசிரியரான இயேசுவின் மீது உங்கள் கண்களை நிலை நிறுத்துங்கள்.
அவர் உங்களுக்காக வனாந்தரத்தில் ஒரு பாதையை உருவாக்குகிறார், அதாவது எதிர்பாராத விதத்தில். நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல.
கர்த்தர் உங்களுக்காக இருக்கிறார். அவர் சாத்தியமற்ற இடங்களில், சாத்தியமற்ற சூழ்நிலைகளில் ஒரு பாதையை உருவாக்குவார்.
ஏனென்றால் அவர் உங்கள் மேல் அக்கறை வைத்திருக்கிறார்.